தடைகளை மீறி அண்ணமார் கோவிலில் நடாத்தப்பட்ட பெளர்ணமி தினப் பொங்கல்
தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா தலைமையில் மட்டுவில் அண்ணமார் கோவிலில் பெளர்ணமி தினப் பொங்கல் நடைபெற்றுள்ளது.
மட்டுவில் கிராமத்தில் பல நூற்றாண்டுகளாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு அண்ணமார் ஆலயத்தின் அருகில் உள்ள நிலப்பரப்பை புதிதாக வாங்கியவர் மதம் மாறியுள்ளார்.
இதனால், அவர், தனது வீட்டு வேலியோடு இருக்கும் அண்ணமார் ஆலயத்தினை அகற்றக்கோரி பிரதேச சபைக்கு அழுத்தம் கொடுத்ததை அடுத்து கோவிலில் வழிபாட்டுக்கு தடைவிதிப்பதாக பிரதேச சபையால் ஊர் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
விடுக்கப்பட்ட கோரிக்கை
அதனையடுத்து, ஊர் மக்கள், நேரடியாக சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் வீட்டிற்கு சென்று தமது மரபுசார் வழிபாட்டை மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
அதனடிப்படையில், மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையில் அண்ணமார் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




