அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்கள் கமலா ஹரிஸ் வசமானது!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது அதிகாரங்களை தற்காலிகமாக துணை ஜனாதிபதி கமலா ஹரிஸிடம் கையளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக ஜோ பைடன், சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே, ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் துணை ஜனாதிபதியிடம் இன்று முதல் கையளிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடமையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
57 வயதான கமலா ஹரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் ஆவார்.
துணை ஜனாதிபதியாக பதவி வகிக்கும் கமலா ஹரிஸ் முழுமையான அதிகாரத்தை ஏற்றுக்கொள்வார், இதில் அமெரிக்க ஆயுதப் படைகள் மற்றும் அணு ஆயுதம் மீதான கட்டுப்பாடு அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
