கனடாவை தாக்கிய சக்தி வாய்ந்த பியோனா புயல்! இருளில் மூழ்கிய இலட்சக்கணக்கான வீடுகள்
கனடாவின் கிழக்கு பகுதியை சக்திவாய்ந்த பியோனா புயல் தாக்கியதில் கனடாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன.
அட்லாண்டிக் கடலில் உருவான சக்திவாய்ந்த பியோனா புயல் கனடா நோக்கி நகர்ந்ததையடுத்து, கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சக்தி வாய்ந்த ஃபியோனா புயலால், நோவா ஸ்கோடியா உள்ளிட்ட தீவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இலட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அவசர நிலை பிரகடனம்
இதன்போது குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நியூஃபவுண்ட்லேண்ட் பகுதியில் கடலில் எழுந்த ராட்சத அலைகளால், கரையோரங்களில் இருந்த வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பல வீடுகள் இடிந்து சேதமடைந்த நிலையில், நியூஃபவுண்ட்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam