பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுவிப்பு
பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், அண்டை நாடுகளுக்கு விரிவான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கம் வெறும் 12 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் எவ்வளவு குறைவான ஆழத்தில் ஏற்படுகிறதோ, அந்தளவுக்குப் புவியின் மேற்பரப்பில் அதன் தாக்கம் தீவிரமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலநடுக்கம், கொலம்பியா, கோஸ்டாரிகா, சிலி மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் சுனாமியைத் தூண்டக்கூடும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சுமார் 46 லட்சம் மக்கள் மிதமான முதல் தீவிரமான அதிர்வுகளை உணர்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.