இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு
இந்தோனேஷியாவை அண்மித்த கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
நிலநடுக்கத்தை அடுத்து, இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
GMT நேரப்படி 0320 மணிக்கு புளோரஸ் கடலில் 18.5 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் Maumere நகருக்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிமீ (600 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு அபாயகரமான அலைகள் சாத்தியமாகும்" என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, இந்தோனேசியாவில் 2004ம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுமத்ரா கடற்கரையைத் தாக்கியது. இதன்போது ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி இந்தோனேசியாவில் சுமார் 170,000 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோஹினி செய்த காரியம், விஜயாவிற்கு பளார் விட சென்ற அண்ணாமலை... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam