நுவரெலியாவில் தொடர்மழை : வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மாலை நேரத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொட்டித்தீர்க்கும் மழையால் ஹட்டன் டிக்கோயா தோட்டத்தில் 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
மேலும் ஹட்டன் - டயகாமம் பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (21) பிற்பகல் ஹட்டன் டிக்கோயா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
பாதுகாப்பான இடங்களுக்கு
பொது மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹட்டன் - போடைஸ் டயகாமம் வீதி உட்பட பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக டிக்கோயா போடைஸ் தோட்ட வழியாக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குள் பாயும் டிக்கோயா கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக குறித்த 50 வீடுகளும் பிரதான வீதியும் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் வெள்ளநீர் வடிந்தோடிக் கொண்டு இருக்கின்ற போதிலும் வெள்ளம் புகுந்த பல வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.
இதனால் குறித்த வீடுகளில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த 100இற்கும் மேற்பட்ட பொது மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படும் என தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.









10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam