சீனாவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 50இற்கும் மேற்பட்டோர் பலி
சீனாவின் திபெத் (Tibet) பகுதியில் இன்று (07) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
திபெத்தில் உள்ள நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7.1 ரிக்டர் அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக 2015ஆம் ஆண்டு
மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளதோடு, அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
Very strong 7.0 #quake hits near Shigatse, Tibet, China - info, user reports and updates | Jan 7, 2025 09:05 am (Shanghai time): https://t.co/WRKs73D34j
— Earthquake Monitor (@EQAlerts) January 7, 2025
முன்னதாக 2015ஆம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே 7.8 ரிக்டர் அளவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.
இதில் கிட்டத்தட்ட 9,000 மக்கள் இறந்ததுடன், 20,000 க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |