மின்வெட்டு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கை - செய்திப்பார்வை (Video)
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை காலப்பகுதியில் மாலை 6 மணிக்கு பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பரீட்சார்த்திகளின் நலன்கருதி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரையான காலப்பகுதிக்குள் மாலை 6 மணியின் பின் மின்தடையை அமுலாக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு அவசியமான எரிபொருள் மற்றும் நீர் உள்ளிட்ட வளங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,