வவுனியா மாவட்டத்தின் பல இடங்களில் நாளை மின்தடை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்டத்தின் பல இடங்களில் மின்சார தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் வவுனியா பிராந்திய காரியாலத்தினர் தெரிவித்துள்ளனர்.
செட்டிக்குளம் மற்றும் வவுனியா வடக்கு பகுதியினை தவிர்ந்த மாவட்டத்தின் ஏனைய அனைத்து பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சாரம் தடைப்படவுள்ளது.
இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்கள் முன் கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அனைவரும் மின்தடையினை அடுத்து
தேவையான முன்னாயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு இலங்கை மின்சார சபையின் வவுனியா
பிராந்திய காரியாலத்தினர் தெரிவித்துள்ளனர்.
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan