வவுனியாவில் ஏற்பட்ட விபத்தால் ஓமந்தை பகுதியில் மின் தடை
Police
Accident
Jaffna
Vavuniya
By Independent Writer
வவுனியாவில் ஏ9 வீதியில் மாணிக்கவளவு சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் ஓமந்தை பகுதியில் மின் தடைப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கன்டர் ரக வாகனம் மின் கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது சாரதிக்குச் சிறு காயம் ஏற்பட்டுள்ளதுடன் வாகனமும் சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை குறித்த விபத்தினால் மின் கம்பம் உடைந்து விழுந்த நிலையில் ஓமந்தை பகுதியின் சில கிராமங்களுக்கான மின்சாரம் அதிகாலை 3 மணியிலிருந்து தடைப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.





ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US