இளைஞர்களிடம் சுதந்திரக் கட்சியை ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும்! - சந்திரிக்கா
அதிகார ஆசைப்பிடித்த தலைவர்களுக்கு கௌரவம் இருந்தால், தமது பதவிகளில் இருந்து விலகி, ஊழல், மோசடியற்ற, கட்சியை உண்மையாக நேரிக்கும் கொள்கை பற்றுக்கொண்ட இளைஞர்களிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அதிகார ஆசைப்பிடித்த, தூரநோக்கமற்ற தலைவர்களால் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.
இப்படியானவர்களுடன் வேலை செய்து நேரத்தை வீணடிக்க தயாரில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேவேளை தனது உத்தியோபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் என்னிடம் கேள்வி ஒன்றை கேட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் உங்களை மீண்டும் கட்சிக்கு அழைக்க தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து உங்கள் கருத்தென்ன என கேட்டிருந்தார். எமது கட்சியின் தலைவர் முற்றிலும் அதிகார ஆசை காரணமாக அப்போது மொட்டுக் கட்சியுடன் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி மீது பற்றில்லை. தூர நோக்கிய பார்வையும் இல்லை.
முற்றிலும் அதிகார பேராசையே இருக்கின்றது.
இந்த அரசாங்கம் செய்யும் அனைத்து தவறுகளிலும் அவர்களும் பங்காளிகள். அவர்களால் அதில் இருந்து விடுப்பட முடியாது என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri