நாட்டின் பல பகுதிகளில் திடீரென ஏற்பட்ட மின் வெட்டு!
நாட்டின் பல பகுதிகளில் தற்போது மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
நாட்டிலுள்ள பல மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே, மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை கூறுகின்றது.
எரிபொருள் தட்டுபாடு காரணமாக மின்பிறப்பாக்கிகளை செயற்படுத்த முடியாததை அடுத்தே இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, களனிதிஸ்ஸ தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று மின்வெட்டு ஏற்படவில்லையெனவும், எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது என உறுதியாக கூற முடியாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் 22ம் திகதி வரை நாட்டில் மின்வெட்டு இருக்காது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 11 மணி நேரம் முன்

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா Cineulagam
