மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நாளை(26) மற்றும் நாளைய மறுதினம்(27) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணிநேரமும் இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் இரண்டு மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.






பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
