மீண்டும் இன்று முதல் மின்வெட்டு! வழங்கப்பட்டது அனுமதி
நத்தார் பண்டிகை காரணமாக கடந்த மூன்று நாட்களாக மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாது இருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் (27.12.2022) முதல் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இன்று முதல் மின்வெட்டு
அதன்படி இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இந்த மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நீடிக்கும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
