அதிகாரமும் மமதையும் கடந்த காலங்களில் பலரைக் காணாமலாக்கியுள்ளது! சிறீதரன்
அதிகாரமும் மமதையும் கடந்த காலங்களில் பலரைக் காணாமலாக்கியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வளமான நாடும் அழகான வாழ்க்கையும் எனும் தொனிப் பொருளில் தேசிய உள்ளுராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும் பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்று(21) கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
அநுர அரசு
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
அதிகாரமும் மமதையும் கடந்த காலங்களில் இருந்த பலரை காணாமல் ஆக்கியுள்ளது.
குறிப்பாக ஜே. ஆர் பிரேமதாச சந்திரிகா மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்ச எல்லோருமே சொன்ன வார்த்தைகள் என்ன எல்லோருமே இன்று இல்லை அநுர அரசு நினைப்பது போன்று இந்த நாட்டை கொண்டு செல்ல முடியாது.

காலம் சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றது.
அதனை யார் சரியாக பயன்படுத்தத் தவறுகிறார்களோ காலம் அந்த தண்டனையை தந்தே தீரும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று பகல் கரைச்சி பிரதேச சபையினுடைய தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அதிகாரி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam