அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உண்டு! செஹான் சேமசிங்க தெரிவிப்பு
''அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தான் உள்ளது'' என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில்,
''சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையில் முதல் கொடுப்பனவு கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்'' என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எங்குமே கூறவில்லை.
அமைச்சரவையை மாற்றும் அதிகாரம்
மேலும் ,அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று அவர்கள், இவர்கள் எதுவும் சொல்லலாம். யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதி சொன்னால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தான் உண்டு.
ஆகவே,
அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமா, இல்லையா என்பது ஜனாதிபதி தான் கூற வேண்டும்‘‘ என்று அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
