நாட்டில் வறுமை நீக்கப்பட வேண்டும் - தமிழ் தேசியக் கூட்டணி வேட்பாளர் கருத்து
மக்கள் நிம்மதியாக தங்களது சுயமாக வாழ வேண்டுமாக இருந்தால் அவர்களுடைய வறுமை நீக்கப்பட வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எங்களுடைய நாட்டைப் பொறுத்தளவில் கணக்கெடுப்பின் பிரகாரம் 8 வீதமான மக்கள்தான் வறுமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வறுமை நீக்கப்பட வேண்டும்
போர் நிறுத்தப்பட்ட பின்னரும் கோவிட் பரவலுக்கு பின்னரும் 20 வீதத்துக்கு மேலான மக்கள் வறுமையில் இருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றது.
ஆகவே, மக்கள் நிம்மதியாக தங்களது சுயமாக வாழவேண்டுமாக இருந்தால் அவர்களுடைய வறுமை நீக்கப்பட வேண்டும்.
திட்டங்கள்
அதற்கான திட்டங்கள் நிச்சயமாக அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோன்று மக்களும் தங்களை தாங்களே தயார்படுத்த கூடிய வழிமுறைகளை அரசியலில் ஈடுபடுகின்ற பிரதிநிதிகள் ஏற்படுத்த வேண்டும்.
அதற்கான திட்டங்களை நானும் செயற்படுத்துவதற்கு மனதில் வைத்திருக்கின்றேன். இதனூடாக வறுமையை நீக்குவதற்கு பாடுபடலாம் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
