அதிகாரப்பகிர்வை மறுத்தால் கோட்டாபயவின் நிலையே அநுரவுக்கும் ஏற்படும்: சபா குகதாஸ் எச்சரிக்கை
அநுர அரசு கோட்டாபயவின் தம்பியர்கள் என்பதை தமிழர் விவகாரத்தில் காட்ட முனைந்தால் ஆட்சிக் கதிரையில் இருந்து வெளியேறுவதற்கான நாட்களை எண்ணும் நிலைமை உருவாகும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் அவர், "ஜனதா விமுக்தி பெரமுன என்ற அடிப்படை பெரும்பான்மை இனவாதத்தில் வளர்க்கப்பட்டு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்து கொண்ட அநுர அரசு, கோட்டாபயவின் தம்பியர்கள் என்பதை தமிழர் விவகாரத்தில் காட்ட முனைந்தால் ஆட்சிக் கதிரையில் இருந்து வெளியேறுவதற்கான நாட்களை எண்ணும் நிலைமை உருவாகும்.
பொருளாதார பிரச்சினை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தமிழர்களுக்கு பொருளாதார பிரச்சினை மட்டும் தான் உள்ளது. அதிகாரப்பகிர்வு தேவையற்றது.13ஆம் திருத்தம் நீக்கப்பட வேண்டும் என கூறிக் கொண்டு அதனை நீக்க புதிய அரசியலமைப்பு குழுவை தன்னிச்சையாக நியமித்த விளைவை எப்படி அனுபவித்தார் என்பதை நாடே அறியும்.
கோட்டாபயவின் வெளியேற்றத்தை சாதகமாக பயன்படுத்தி ஜனாதிபதி கதிரைக்கு வந்து விட்டு கோட்டாபய தமிழர் விவகாரத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டை அநுர கையில் எடுப்பதாக இருந்தால் அவர் சந்தித்த அதே நிலையை எதிர் கொள்ள வேண்டி வரும்.
தமிழர் விவகாரத்தை இனவாதமாக கையில் எடுப்பதான வெளிப்பாடுகள் தான் தொடர்ச்சியாக அநுர அரசின் பிரதிநிதிகள் அனைவரும் வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. இப்படியான வெளிப்பாடு நாட்டின் மாற்றத்திற்கு ஆரோக்கியமாக அமையமாட்டாது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தீபாவளி பரிசாக வந்த விவாகரத்து நோட்டீஸ்.. சின்ன மருமகள் நடிகையின் அதிரடி- கணவர் உடைத்த ரகசியம் Manithan

தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri
