நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகத்தின் கோரிக்கை
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பழைய அரசியல்வாதிகளை நிராகரித்து பதிய முகங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெயரளவுக்கு புதிய முகங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. எனவே குறித்த சூழ்ச்சிகரமான நடவடிக்கையை கண்டறிந்து வாக்காளர் பெருமக்கள் சரியான முறையில் சிந்தித்து பழைய அரசியல்வாதிகளை தோற்கடிக்க வேண்டும்.
புதிய முகங்கள்
கடந்த 15 வருடங்களாகவும் அதற்கு முன்னரும் இந்த பழைய அரசியல்வாதிகள் தமிழ் மக்களை விற்றுப் பிழைத்தார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
ஆகவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய முகங்களை பொதுமக்கள் தெரிவு செய்ய வேண்டும்” என்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |