வறுமை வேகமாக அதிகரித்துள்ளது! உக்கிரமடைந்துள்ள பிரச்சினை - மைத்திரி
மக்கள் கடும் பொருளாதார கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்ற போதிலும் அந்த பிரச்சினைக்கு உடனடியான தீர்வுக்கு இருக்கும் என தான் நம்பவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் அவர் இதனை கூறியுள்ளார்.
"மக்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர். மக்களின் பொருளாதார கஷ்டம், வறுமை என்பன வேகமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் மிகவும் உக்கிரமடைந்துள்ளன.
இவற்றுக்கு தீர்வு ஒன்றை வழங்க வேண்டும். அவசரமான, உடனடியாக தீர்வு இருக்குமா என்பதை எம்மால் எண்ண முடியாது. இதனால், திட்டமிட்ட வேலைத்திட்டத்தின் ஊடாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம்" எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri