பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்! முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் சுடர் ஏற்றல்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை வந்தடைந்துள்ளது.
அங்கு இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழர்களின் உரிமை கோரிய பேரணி, நீதிமன்றத் தடை, பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் பல தடைகளையும் தாண்டி தற்போது முல்லைத்தீவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவு நகரத்தில் பயணித்து, மாவட்டச் செயலகம் வரை சென்ற பேரணி, அங்கிருந்து முள்ளிவாய்க்கால் நினைவிடம் வரை வாகனக் பேரணியாகச் சென்றடைந்துள்ளது.
அத்துடன், போரில் உயிரிழந்தோர் நினைவுகூரப்பட்டு அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து அங்கு மதிய போசன நிகழ்வு இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.










தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
