இளம் அமைச்சர்களின் திடீர் தீர்மானம்! பொதுஜன பெரமுனவிற்குள் கடும் மோதல்
பொதுஜன பெரமுனவில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் இளம் அமைச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடுவதற்கு ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் குழுவினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவில் விரிசல்
இதன் காரணமாக அந்த குழுவினர் பொதுஜன பெரமுனவின் அரசியல் விவகாரங்களை தவிர்த்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாட்களில் கட்சி அலுவலகத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களுக்கு கூட பதிலளிக்காமல் மௌனமாக இருப்பதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவுளை, மாத்தறை, கண்டி, அனுராதபுரம், மாத்தளை, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துடன் கைகோர்த்து வருவதாகவும் அரசாங்கத்தின் தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
