சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: ஆரம்பமாகும் பொதுஜன பெரமுனவின் முதலாவது பொதுக்கூட்டம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இலக்காகக்கொண்டு நாடளாவிய ரீதியில் தொகுதிவாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கலாவெவ தொகுதியின் பிரதம அமைப்பாளர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
26 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு அனுராதபுரம், தலாவ நகரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.
பொதுஜன பெரமுனவின் பலம்
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள், அனைத்து செயற்பாட்டாளர்களும் கிராம மட்டத்தில் அணிவகுத்து கலந்து கொள்ளவுள்ளனர்.
அரசியல் தளத்தில் எதிரணியினர் எவ்வளவு அவதூறு செய்தாலும், பொதுஜன பெரமுனவின் பலத்தை எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டுக்கு எடுத்துக் காட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
