உடுத்துறை வேம்படியில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்தாக காணப்படும் மூடப்படாத குழி
வடமராட்சி, கிழக்கு உடுத்துறை வேம்படி முத்தமிழ் சனசமூக நிலையத்துக்கு அருகாமையில் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் அகழப்பட்ட குழி ஒன்று மூடப்படாமல் காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
குறித்த இடம் மூன்று வீதிகள் சந்திக்கும் முச்சந்தி ஆகும்.
அத்துடன் இந்த இடத்திலிருந்து 300M தூரத்தில் 30க்கு மேற்பட்ட பிள்ளைகள் படிக்கும் உடுத்துறை புனித மரியாள் முன்பள்ளி உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் உடுத்துறை மகாவித்தியாலயம் போன்றன அமைந்துள்ளன.
உயிராபத்து
பாடசாலைக்கு செல்லும் போதும் பாடசாலை முடிந்து வீடு வரும்போதும் சிறுவர்கள் குறித்த இடத்தில் இருந்து விளையாடி செல்வதால் உயிராபத்து ஏற்படும் நிலை காணப்படுகின்றது.
ஆகவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறித்த குழியை உடன் மூடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
அத்துடன், இதேபோன்று 2013ஆம் ஆண்டில் உடுத்துறை 10ஆம் வட்டாரத்தில் இலங்கை மின்சாரத்தின் மின்கம்பம் நடுவதற்கு வெட்டிய குழியில் ஒரு முன்பள்ளி குழந்தை விழுந்து சாவடைந்த சம்பவம் ஒன்று ஏற்கெனவே இடம்பெற்றதையும் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



