துமிந்த சில்வாவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் மீதான வாதத்தை நேற்று(23.09.2022) உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மனுக்கள் மீதான வாதம்

இந்த மனுக்கள் மீதான வாதத்தை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துமிந்த சில்வாவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலைக் காவலில் வைக்குமாறு கடந்த மே 31ஆம் திகதி உயர் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
பொது மன்னிப்பு

அத்துடன் துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கி நீதிமன்றம் இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தது.
2011, ஒக்டோபர் 8ஆம் திகதியன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லச்மன் பிரேமசந்திர கொல்லப்பட்டமை தொடர்பில் 08 செப்டெம்பர் 2016 அன்று துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், அவருக்கு 2021 ஆம் ஆண்டு
ஜூன் 24 ஆம் திகதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri