கோட்டாபயவின் பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுடன் சேர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள துமிந்த சில்வாவும் இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா 2016 முதல் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. எனினும் இது தொடர்பில் கருத்து வெளியிட சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.