உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது தம்மை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் திருத்தம்
இதற்கான காரணம் என்னவெனில், ”சாதாரண தரப் பரீட்சை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு போன்ற சமய நிகழ்வுகள் குறித்த காலப்பகுதியில் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தேர்தல் திருத்தங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பெண்களுக்கு 25 வீதம் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் போட்டியாளருக்கு விருந்து வைத்த சரத்குமார், சர்ப்ரைஸ் போன் கால்.. இந்த வாரம் நடக்கும் விஷயங்கள் Cineulagam
