திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன
திருகோணமலை மாவட்டத்தில் அனைத்துப் பிரதேசங்களிலும் "இலவச கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கத்தினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கந்தளாய், திருகோணமலை மற்றும் தம்பலாகாமம் போன்ற பிரதேசங்களில் சந்திகளில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் சிறையில் அடைத்து மாதங்கள் இரண்டு, மாணவர் மக்கள் தலைவர்களை உடனே விடுதலை செய் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
அகில சந்தீப, வசந்த முதலிகே, சமீர கொஸ்வத்த மற்றும் கோஷிலா ஹன்சமாலி, ஹேசான் ஹர்சன போன்ற மாணவத் தலைவர்களின் புகைப்படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
சிங்கள மற்றும் தமிழ் பொழிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
வீதியால் செல்வோர் சுவரொட்டிகளைப் படித்து விட்டுச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது.

படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam