கனடாவில் இந்திரா காந்தியை மோசமாக சித்தரித்த சுவரொட்டிக்கு கண்டனம்
இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் (Indira Gandhi) படுகொலையை சித்தரிக்கும் வகையில், கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரில் வைக்கப்பட்ட சுவரொட்டியை கண்டிப்பதாக கனடாவின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) தெரிவித்துள்ளார்.
மேலும், வன்முறையை ஊக்குவிப்பதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சுவரொட்டியானது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திரா காந்தியின் மீது குண்டு துளைப்பதை சுட்டிக்காட்டுகின்றது.
உரிய சட்ட நடவடிக்கை
இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடாவில் வாழும் இந்துக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இந்தியாவினை பூர்வீகமாகக் கொண்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் கனடாவின் சட்ட நடைமுறையாக்க நிலையங்கள் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா - கனடா பிரச்சினை
அதேவேளை, இந்த சுவரொட்டியில் இந்திரா காந்தியின் நெற்றியில் உள்ள குங்குமம் இந்துக்களை குறிப்பதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு கனடாவில் இடம் அளிக்கப்பட்டுள்ளமை இந்தியா மற்றும் கனடா போன்ற இரு நாடுகளுக்கிடையிலான இடையிலான நீண்டகால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
