இலங்கையிலிருந்து நான்கு நாடுகளுக்கு தபால் சேவைகள் நிறுத்தம்
அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கான தபால் ஏற்றுமதிகளை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கைக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம் மற்றும் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள.

விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை
மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு அஞ்சல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், போதுமான எரிபொருளை வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக நாட்டிற்குள் தபால் போக்குவரத்து நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You may like this
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri
50 லட்ச ரூபாய் வேலையை விட்டுவிட்டு மோமோஸ் பிசினஸ் துவக்கிய நபர்: அவரது இன்றைய வருமானம் News Lankasri