நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Ampara Nuwara Eliya Strike Sri Lanka Postal Strike
By Independent Writer Aug 18, 2025 09:07 AM GMT
Report

நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவாக நுவரெலியா மற்றும் நானுஓயாவிலும் தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி (18) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

எனினும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபால் சேவை மற்றும் அலுவலக கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலையும், பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

இதனால் தபால் நிலையங்களுக்கு சேவைகளை பெற வந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

செய்தி - செ.திவாகரன்

அம்பாறை

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட வரலாற்று முடிவு! சூடுபிடிக்கும் ரஷ்ய - உக்ரைன் விவகாரம்

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட வரலாற்று முடிவு! சூடுபிடிக்கும் ரஷ்ய - உக்ரைன் விவகாரம்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கினர். இதற்கமைய இன்று (18) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள் ஊழியர்கள் ஆதரவளித்தமையினால் தபால் அலுவலக சேவைகள் யாவும் முடங்கியுள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

இதன்படி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான தபாற்கந்தோர் தவிர 12 தபால் நிலையங்கள் குறித்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததுடன் இவ்வேலை நிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அத்துடன் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

செய்தி - சிஹான் பாரூக்

ஹட்டன்

தொழிற்சங்க போராட்டம் காரணமாக ஹட்டன் நகரில் உள்ள தபால் நிலையம் உட்பட மலையக பகுதியில் உள்ள சகல தபால் நிலையங்களும் பூட்டு போடப்பட்டிருந்தன.

பாதாள உலக குழுக்கள் இல்லாத வடக்கு மாகாணம்! காரணம் கூறும் அமைச்சர்

பாதாள உலக குழுக்கள் இல்லாத வடக்கு மாகாணம்! காரணம் கூறும் அமைச்சர்

பெருபாலானவர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக தபால் நிவையம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதனை காணக்கூடியதாக இருந்தது.

19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (17) மாலை 4.00 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கினர்.

மத்திய தபால் பரிமாற்றத்தில் தொடங்கிய இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, இன்று அனைத்து தபால் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு! ஒப்புக்கொண்ட ரஷ்யா

உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு! ஒப்புக்கொண்ட ரஷ்யா

இருப்பினும், குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், கருத்து தெரிவித்த தபால்மா அதிபர் ருவன் சத்குமார, தபால் ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுபோன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது என கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி

தபால் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி பிரதான தபால் நிலையம் மற்றும் பரந்தன் தபால் நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

தபால் சேவைகளை பெற வந்த மக்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும் உப தபால் நிலையங்கள் தமது கடமைகளை இன்று திறந்திருந்தமை காணக்கூடியவராக இருந்தவை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US