அறுவடைக்குப் பின் வயல்களுக்கு தீ வைப்பு - கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்
தற்போது அதிகளவான வெப்பநிலை நிலவி வரும் நிலையில், வயல்களில் தீ வைப்பதால் தீ கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவும் அபாயம் காணப்படுவதாக கந்தளாய் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வயல் பகுதிகளில் தீ வைப்பதால் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், அதிகளவு புகை வெளியேறுவதன் காரணமாக சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடிய நிலை காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தீ வைப்பதை தவிர்த்தல்
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், அறுவடைக்குப் பின்னர் பயிர்க் கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.

அதிக வெப்பநிலை நிலவும் காலங்களில் வயல்களுக்கு தீ வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வயல்களுக்கு தீ வைப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.