இரண்டு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஈட்டப்பட்ட வருமானம்
கடந்த ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரு விடுமுறை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த இரு நாட்களிலும் மொத்தம் 325,316 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன. ஆகஸ்ட் 26: 163,763 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 60,409,995 ரூபா வருமானம் ஈட்டப்பட்டது.
ஆகஸ்ட் 27: 161,553 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 64,164,930 ரூபா வருமானம் ஈட்டப்பட்டது.

இக்காலப்பகுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (E01) மற்றும் வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam