முக்கிய அரச திணைக்கள ஊழியர்களின் மோசமான செயல்.. அம்பலமாகும் பெரும் மோசடி!
பெரும்பாலான அஞ்சல் ஊழியர்கள் கைரேகை சரிபார்ப்பு இன்றி 10 மில்லியனுக்கும் அதிகமான கூடுதல் நேரக் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளதாக அஞ்சல் துறைத் தலைவர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
உலக அஞ்சல் தினத்தைக் கொண்டாடும் வகையில் ஹப்புத்தளை அஞ்சல் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் 400இற்கும் மேற்பட்ட தணிக்கை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இந்த மோசடி அம்பலமானதாக அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
“ஒரு நபருக்கு நான்கு மணிநேர கூடுதல் நேரக் கொடுப்பனவு கிடைக்கிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகன பராமரிப்புக்காக குறைந்தது பத்து தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
வாகன பராமரிப்பு
அவர்கள் கூட்டாக சுமார் 40 மணிநேர கூடுதல் நேரத்தைக் கோருகிறார்கள். ஒரு நாளைக்கு பராமரிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்தத் தொகை அதிகரிக்கும்.
இந்த கூடுதல் நேரக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டபோது, ஞாயிற்றுக்கிழமைகளில் இனி வேலை செய்ய முடியாது என்று ஊழியர்கள் கூறினர்.
அதன்படி, வாகனத்தை தனியார் இடங்களில் பராமரிக்க முடியும் என்று நான் அவர்களிடம் தெரிவித்தேன்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 16 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
