இலங்கை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தத்தில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றுமொரு ஒப்பந்தத்தில் இணைய வாய்ப்புள்ளதாக நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று (12.11.2026) ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
விசேட குழு நியமனம்
இலங்கையின் அடுத்தகட்ட பொருளாதாரத் தேவைகளை ஆராய அமைச்சரவையால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு இதுவரை தனது கூட்டத்தை நடத்தவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த குழு தனது பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் இலங்கை மீண்டும் IMF உடன் புதிய ஒப்பந்தத்தில் இணைய வேண்டுமா என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
திட்டம் வெற்றிகரமாக நிறைவு
17ஆவது IMF திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
எனவே, இனிவரும் காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஏற்ற நடவடிக்கைகள் ஆராயப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.