171000 ரூபாவிற்கு மேல் சம்பளம் பெறும் துறைமுக அதிகாரசபை பணியாளர்கள்! அமைச்சரின் தகவல்
இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணியாளர்கள் 171,000 ரூபாவிற்கு மேல் சம்பளம் பெற்றுக் கொள்வதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
துறைமுக அதிகாரசபையின் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடத்தை குறிப்பிட்டுள்ளார்.
காணி விற்பனை செய்யப்படுவதற்காக பணியாளர்கள் போராட்டம் நடத்தவில்லை எனவும், வரி அறவீட்டுக்கு எதிர்ப்பை வெளியிட்டே போராட்டம் நடத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணியாளர் பெறும் நலன்கள்
பணியாளர் ஒருவர் 171,000 ரூபா சம்பளம் பெற்றுக் கொள்வதுடன், போனஸ், மூன்று வேளை உணவு உள்ளிட்ட பல நலன்களை பெற்றுக் கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல நலன்களை பெற்றுக் கொள்ளும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டம் முன்னெடுக்கப்படுவதால் சில கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாகவும், இதனால் நட்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
May you like this Video



