திருகோணமலையில் போராட்டம் திரைப்படம்! ரசிகர்களை சந்திக்க வருகின்றார் கந்தையா பாஸ்கரன்
போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி திருகோணமலையில் திரையிடப்பட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள SAS Plazaவில் வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிக்கு திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெறவுள்ளது. ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
போராட்டம் திரைப்படம்
IBC Tamil Productions மற்றும் BlackBoard International ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ‘போராட்டம்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையா வழங்கியுள்ளதுடன், IBC Tamil Productions மற்றும் BlackBoard ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளை முன்னெடுத்துள்ளன.

ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது.
கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், இளைஞர் ஒருவரின் கனவு, குடும்பம், காதல், நட்பு மற்றும் வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் போராட்டங்களை மையமாகக் கொண்டுள்ளது.
திரைப்படத்தின் தயாரிப்பாளர் கந்தையா பாஸ்கரனும் திருகோணமலைக்கு இரசிகர்களுடன் திரைப்படத்தை பார்க்க வருகை தரவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri