மட்டக்களப்பில் 3 நாட்கள் திரையிடப்படும் போராட்டம் திரைப்படம் - ரசிகர்களுக்கு சிறப்பு சலுகைகள்
மட்டக்களப்பில், போராட்டம் திரைப்படம் எதிர்வரும் 09,10 மற்றும் 11ஆம் திகதிகளில் திரையிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மட்டக்களப்பில் உள்ள PCcineMAX திரையரங்கில் மாலை 5 மணியளவில் போராட்டம் திரைப்படம் திரையிடப்படவுள்ள நிலையில், இந்த திரைப்படம் அதிக்கூடிய நாடுகளில் திரையிடப்பட்ட திரைப்படமாகவும் ஈழத்தமிழர்களால் கொண்டாடப்படுகின்றது.
அத்துடன், ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
போராட்டம் திரைப்படம்
IBC Tamil Productions மற்றும் BlackBoard International ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் போராட்டம் திரைப்படம் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையாவின் IBC Tamil Productions மற்றும் BlackBoard ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள போராட்டம் திரைப்படம், இளைஞர் ஒருவரின் கனவு, குடும்பம், காதல், நட்பு மற்றும் வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் போராட்டங்களை மையமாகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த வாரம் திருகோணமலையில் திரையிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அநுரவுக்கு உதவிய விடுதலைப் புலிகள்! தனிப்பட்ட ரீதியில் அர்ச்சுனாவுக்கு கிடைத்த தகவல் என அறிவித்த மகிந்த தரப்பு
அநுரவுக்கு உதவிய விடுதலைப் புலிகள்! தனிப்பட்ட ரீதியில் அர்ச்சுனாவுக்கு கிடைத்த தகவல் என அறிவித்த மகிந்த தரப்பு
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri