பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி!
பாப்பரசர் போப் பிரான்சிஸிற்கு வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (22) அஞ்சலி செலுத்தப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்ஸ்சிஸ் வத்திகானில் நேற்று(21) உயிரிழந்துள்ளார்.
மறைவிற்கு இரங்கல்
அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர்கள் தொடர்போராட்டம் மேற்கொண்டு வரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அன்னாரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பாப்பரசரின் மறைவையொட்டி துயரடைந்திருக்கும் உலக கிறிஸ்தவ மக்களின் துயரத்தில் நாங்களும் கலந்து கொள்கின்றோம் என்று அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 12 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam