பாப்பரசரின் உடல்நிலை குறித்து வெளியான அறிவிப்பு
பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் தற்போது நலமாக இருப்பதாக வத்திக்கான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவர் தற்போது, செயற்கை சுவாசத்தின் துணையின்றி இயற்கையாக சுவாசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது இதயம் சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நுரையீரலில் தொற்று
இந்நிலையில், அவரின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
The Vatican has released a new update on Pope Francis' health, confirming that the 88-year-old Pontiff remains fever-free but is battling a complex polymicrobial respiratory infection. #PopeFrancis #Vatican #BreakingNews #PopeHealth #CatholicChurch #Rome #VaticanNews pic.twitter.com/v17OOUEbIp
— WNBJ 39 (@wnbj39) February 19, 2025
நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |