மரண விளையாட்டை உடன் நிறுத்துங்கள் - புடினிடம் போப் பிரான்சிஸ் அவசர கோரிக்கை
போரை உடன் நிறுத்துங்கள் என்று போப் பிரான்சிஸ் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போர் தொடங்கிய பின்னர் போப் புட்டினிடம் இது போன்ற கோரிக்கையை வைப்பது இதுவே முதல் முறையாகும்.
வன்முறை மற்றும் மரணத்தின் இந்த ஆபத்தான சுழற்சியிலிருந்து வெளியேறுமாறு போப் அழைப்பு விடுக்கிறார். (உக்ரைன் போரை நிறுத்துமாறு புடினிடம் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்) போரினால் உருவாக்கப்பட்ட இந்த நரக நிலையை வன்மையாக கண்டிப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
அச்சம் வெளியிட்டுள்ள போப் பிரான்சிஸ்
நிலைமை ஆபத்தானது மற்றும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும் சர்வதேச கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தாம் அஞ்சுவதாகவும் போப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் ஏற்படுத்தப்போகும் அழிவுகரமான விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதாகவும் போப் கூறினார்.
மரண விளையாட்டை நிறுத்துமாறு விளாடிமிர் புடினிடம் போப் வேண்டுகோள் விடுத்ததோடு, அமைதிக்கான முன்மொழிவுகளை வரவேற்குமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் கேட்டுக் கொண்டார்.