இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போப் பிரான்சிஸ்..!
ஐந்து வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரோமில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, போப் முழுமையாக குணமடையவில்லை என்றும், முழுமையாக குணமடைய இரண்டு மாதங்கள் எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் முன் தோற்றம்...
அத்துடன், அதிக மக்கள் நிரம்பிய சந்திப்புகளையோ அல்லது அவரை சோர்வடையச் செய்யும் சந்திப்புகளையோ பிரான்சிஸ் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி சுவாசப் பிரச்சினைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரான்சிஸ், தற்போதே முதல் முறையாக மக்கள் மத்தியில் தோன்றுவார் என்று வத்திக்கான் முன்னதாகக் கூறியது.
இதற்கமைய, ஐந்து வாரங்களாக ஏஞ்சலஸ் பிரார்த்தனைகளைத் தவறவிட்டதால், பாரம்பரிய ஏஞ்சலஸ் பிரார்த்தனைக்குப் பிறகு, உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணியளவில் உரோமின் அகோஸ்டினோ ஜெமெல்லி மருத்துவமனையிலிருந்து கூட்டத்தினருக்கு போப்பாண்டவர் ஒரு ஆசீர்வாதத்தையும் கையசைப்பையும் வழங்குவார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
