பாப்பரசர் பிரான்ஸிஸின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு : வத்திக்கான் அறிவிப்பு
பாப்பரசர் பிரான்சிஸ் (Pope Francis) இரண்டு புதிய கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
இது நிமோனியாவை எதிர்த்துப் போரிடும் அவரின் உடல் நிலையில் ஏற்பட்ட மற்றொரு பின்னடைவாகும் என்று வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு மூச்சுக்குழாய் பரிசோதனை
இரண்டு மூச்சுக்குழாய் பரிசோதனைகளின் போது மருத்துவர்கள் அவரது நுரையீரலில் இருந்து, பெருமளவான சளியை பிரித்தெடுத்தனர்.
ஆய்வக சோதனைகள், எந்த புதிய பக்டீரியாவையும் குறிக்கவில்லை என்பதால், சளி அவரது உடலின் அசல் நிமோனியா தொற்றுக்கான எதிர்வினை என்றும் புதிய தொற்று அல்ல என்றும் வத்திக்கான் கூறியுள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸ் விழிப்புடன், நோக்குநிலையுடன் இருந்தார் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் ஒத்துழைத்தார் என்றும் வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கும் மேலாக..
88 வயதான பாப்பரசர், இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடும் சுகயீனத்தை எதிர்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், மூச்சுக்குழாய் பரிசோதனைகளின் போது, நுரையீரலில் சளியின் அளவு, கவலையை பிரதிபலிக்கிறது என்று சிகாகோவில் உள்ள நோர்த்வெஸ்டர்ன் மெடிசினில் நுரையீரல் தீவிர சிகிச்சை மருத்துவரான ஜோன் கோல்மேன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சளியை கைமுறையாக அகற்ற வேண்டியிருந்தது என்பது கவலைக்குரியது என்று குறிப்பிடுள்ள அவர், பாப்பரசர், சளியை தாமாகவே அகற்றவில்லை என்று இது அர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
