பூநகரி மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்படும் காற்றாலை விசேட திட்டம் - சிறீதரன் எம்.பி கண்டனம்
காற்றாலைத் திட்டத்திற்காக கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
பூநகரி பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டத்தை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிப்பு
இந்த நிலையில், இந்த திட்டத்தினால் பயன் தரும் நிலையிலுள்ள 5000ற்கும் அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்படுவதோடு, அதனை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரமும் முற்று முழுதாக பாதிக்கப்படும்.
கள விஜயத்தின் பின்னர், கிராஞ்சி ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும், தொடர் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் கண்ணதாசன், கட்சியின் செயற்பாட்டாளர் குபேந்திரன் ஆகியோருடன் ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.



சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam