உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பூநகரி கடற்தொழிலாளர்கள்(Photos)
பூநகரி - கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் பாரம்பரியமாக சிறகுவலை தொழிலில் ஈடுபட்டுவரும் கடற்தொழிலாளர்கள் நேற்று காலைமுதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சிறகுவலை தொழில்
இலவன்குடா கடற்பரப்பில், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட கடற்தொழிலாளர்கள், சிறகுவலை தொழிலின் ஊடாக இறால், நண்டு, மீன் போன்றவற்றை பிடிப்பதை அன்றாடா வாழ்வாதார தொழிலாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டை பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
உணவு தவிர்ப்பு போராட்டம்
இதனைதொடர்ந்தே கடற்தொழிலாளர்கள் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று காலையிலிருந்து இரவிரவாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் சாதகமான முடிவை சம்மந்தப்பட்டவர்கள் வழங்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan
