பூநகரி பிரதேச செயலகத்திற்கு எதிரே உள்ள பொருத்தமற்ற சூழலால் அசௌகரியம்

Kilinochchi Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) Jun 30, 2024 03:48 PM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

கிளிநொச்சி (Kilinochchi) - பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்னுள்ள பொருத்தமற்ற சூழலினால் அசௌகரியமான நிலை ஏற்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுகின்றது.

பிரதேச செயலகத்திற்கு எதிரே உள்ள வியாபார நிலையங்களிடையே குப்பைகள் அகற்றப்படாத ஒரு சூழல் இருப்பதையும் அவை அசௌகரியத்தினை ஏற்படுத்தி விடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

பிரதேச செயலகத்தின் பக்கமாக உள்ள பகுதி முழுவதும் குப்பைகள் இல்லாத ஒரு சூழலில் தூய்மை பேணப்படுவதோடு காட்சித் தோற்றத்தில் மனதை கவருவதாகவும் அது அமைந்துள்ளது.

குப்பைகளை அகற்றுவதற்கும் வியாபார நிலையங்கள் அமைந்துள்ளன. பகுதியின் தூய்மையை பேணுவதற்கும் இன்னும் அதிகமாக அக்கறை செலுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

திருகோணமலையில் நகரசபை ஊழியர் மீது தாக்குதல்

திருகோணமலையில் நகரசபை ஊழியர் மீது தாக்குதல்

மேற்கொண்ட அவதானிப்பு  

விடுமுறை நாளொன்றில் பூநகரி வாடியடிச் சந்தி என அழைக்கப்படும் இந்தப் பகுதியில் மேற்கொண்ட அவதானிப்பு இரு விதமான எண்ணத் தோற்றத்தினை தந்திருந்தது.

பூநகரி பிரதேச செயலகத்திற்கு எதிரே உள்ள பொருத்தமற்ற சூழலால் அசௌகரியம் | Poonagari Divisional Secretariat Office Outside

ஒரு புறம் தூய்மையான சூழலும் மறுபுறம் குப்பைகள் அகற்றப்படாத நிலையில் தூய்மையற்ற சூழலும் நிலையிருந்தது. முச்சந்தி மற்றும் சுற்றுப் பாதையினை கொண்டமைந்த பிரதான வீதியின் இரு பக்கங்களின் அவதானிப்பாக இது இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அவதானிப்புக்கள் தொடர்பில் அப்பகுதி மக்களிடையே மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவர்களின் பதிலளிப்புக்கள் இயல்பாக இருந்தன.

குப்பைகளை இன்னும் அள்ளவில்லை. நாளைக்கு சிலவேளை அள்ளலாம் என வியாபார நிலையமொன்றில் பணியாற்றியவர் இது தொடர்பில் கேட்ட போது குறிப்பிட்டிருந்தார்.

குப்பைகளை அகற்றும் ஒரு சிறந்த பொறிமுறை பேணப்படவில்லை என்பதும் அப்பகுதி மக்களிடையே இது நமது நகரம். அதனை தூய்மையாக பேண வேண்டும் என்ற எண்ணக்கரு அவர்களிடையே வலுவாக இல்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும்.

விடுமுறை நாளான அன்று மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த ஒரு சூழலிலும் அப்பகுதி குப்பைகளால் நிறைந்து இருந்ததும் அவை உடனுக்குடன் அகற்றப்படாததும் ஆரோக்கியமான பழக்கமாக இருக்காது என அவதானிப்பாளர்கள் சில குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

நாட்டு மக்களுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட அறிவிப்பு

பிரதேச சபையின் செயல்

பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்னுள்ள வீதியின் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. குப்பைகளை போடுவதற்கென குப்பைத்தொட்டிகளும் வீதியின் ஓரமாக வைக்கப்பட்டுள்ளன.

பூநகரி பிரதேச செயலகத்திற்கு எதிரே உள்ள பொருத்தமற்ற சூழலால் அசௌகரியம் | Poonagari Divisional Secretariat Office Outside

ஆனாலும் பிரதேச செயலகத்தின் முன்னுள்ள வீதியின் பிரதேச செயலகத்திற்கு எதிர்ப் பக்கத்தில் உள்ள ஓரங்களில் குப்பைகள் அகற்றப்படாத ஒரு சூழலும் குப்பைகளை போடுவதற்கான குப்பைத்தொட்டிகள் இல்லாத சூழலையும் அவதானிக்கலாம்.

வியாபார நிலையத்தின் முன்னுள்ள பகுதிகளில் விற்பனைப் பொருட்களின் கழிவுகளை குப்பைகளாக வீசியிருப்பதை தவிர்த்து அவற்றை உரிய முறையில் வியாபார நிலைய உரிமையாளர்கள் அகற்றுவதற்கு பிரதேச சபையினர் நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.

ATM இயந்திர நிலையத்திற்கு அருகிலும் பிரதேச செயலகத்தின் பெயர்ப் பலகைக்கு அருகிலும் குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் சிறிய இடைவெளியில் இருக்கின்றன. ஆனாலும் இது போல் எதிர்ப்பக்கத்தில் குப்பைக் கூடைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பிரதேசத்தின் தூய்மையும் அந்தக் பிரதேசத்தின் பராமரிப்பும் அப்பகுதியினை ஆளுகை செய்து வரும் பிரதேச சபையின் பொறுப்பு என்பதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் முன்னெடுப்பு

தூய்மையைப் பேண எடுத்த முயற்சி 

பூநகரி வாடியடிச் சந்தியை சூழவுள்ள பகுதிகளில் முடிந்தளவு தூய்மையினை பேணிக்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வியாபார நிலையமொன்றை நடத்தி வருகின்ற வரும் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

பூநகரி பிரதேச செயலகத்திற்கு எதிரே உள்ள பொருத்தமற்ற சூழலால் அசௌகரியம் | Poonagari Divisional Secretariat Office Outside

வியாபார நிலையங்களினால் மேற்கொள்ளப்படும் அவற்றின் வியாபாரச் செயற்பாட்டின் போதே குப்பைகள் தோன்றுகின்றன.இவற்றை உரிய முறைகளில் அகற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் நுகர்வோரும் வியாபாரிகளும் ஒருமித்து தூய்மை பேணலுக்காக செயற்படாமையே இந்த அசௌகரியத்திற்கு காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறியளவிலான விற்பனைக் கூடமொன்றின் முன் காட்சிப்படுத்தப்பட்ட அறிவிப்பொன்றில் "இங்கே வெற்றிலை துப்ப வேண்டாம்" எனவும் "இங்கே புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது". எனவும் எழுதப்பட்டுள்ளது.

இந்த அணுகுமுறை தூய்மையைப் பேணும் அவர்களது முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.இத்தகைய அணுகு முறைகளில் இருந்து பூநகரி நகரினை அழகுற தூய்மையாக பேணிக்கொள்ள அன்றைய நாள் குப்பைகளை உடனுக்குடன் அன்றைய பொழுதிலேயே அகற்றும் பொறிமுறையும் தூய்மை பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை காட்சிப்படுத்தலுமே போதுமானதாக இருக்கும் என பூநகரி வாழ் கல்விப்புலத்தினைச் சேர்ந்த சிலர் இது தொடர்பில் அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதியில் பகல் நேரத்தில் நடைபெறும் வியாபார முயற்சியின் போது வீதிகளின் ஓரங்களில் சேரும் வியாபாரக் கழிவுகளை வியாபார நிலையங்கள் மூடப்படும் இரவு நேரத்தில் அகற்ற ஒரு குழுவினர் செயற்பட்டு வருவதையும் அது போல் இங்கேயும் முயற்சிக்கலாம் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

வியாபார நிலையத்தின் பக்கமாக உள்ள பகுதியின் அமைவிடமும் அதனை தூய்மையாக பேணுவதற்கு எடுக்கும் முயற்சிகளும் ஒரு சேர மதிப்பிடப்பட்டு பூநகரி நகரில் கூடும் மக்களின் காட்சிப் புலத்தில் இருந்து குப்பைகளை அகற்றி அழகிய நகரமாக பூநகரி நகரினை விளங்கச் செய்யலாம் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.

விடுதலைப் புலிகள் தொடர்பில் பிள்ளையானின் சர்ச்சைக்குரிய கருத்து! விசாரணை கோரும் மகிந்த தரப்பு

விடுதலைப் புலிகள் தொடர்பில் பிள்ளையானின் சர்ச்சைக்குரிய கருத்து! விசாரணை கோரும் மகிந்த தரப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, India, பிரான்ஸ், France, Toronto, Canada

01 Jul, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada, Markham, Canada

24 Jun, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

30 Jun, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, Frankfurt, Germany

29 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கத்தானை, England, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

20 Jun, 2024
37ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், சங்குவேலி வடக்கு, யாழ்ப்பாணம்

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

கரம்பொன், நீராவியடி, Mississauga, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, கரம்பன், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

முள்ளியவளை, ஒட்டுசுட்டான், Croydon, United Kingdom, Birmingham, United Kingdom

09 Jun, 2024
45ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Mississauga, Canada

11 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா, Scarborough, Canada

27 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

30 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, கிளிநொச்சி, வவுனியா, நொச்சிமோட்டை

01 Jun, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, அரியாலை, கொட்டாஞ்சேனை, கொழும்பு சொய்சாபுரம், Toronto, Canada

27 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, யாழ்ப்பாணம்

29 Jun, 2014
மரண அறிவித்தல்

புலோலி, ஜேர்மனி, Germany, அமெரிக்கா, United States, Toronto, Canada

27 Jun, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, நீராவியடி, Stockholm, Sweden

22 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US