பாதுகாப்பு நகர்வில் பங்காளி நாடுகளுடன் கைகோர்க்க தயாராகும் இலங்கை
பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் பங்காளி நாடுகளுடன் தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள இலங்கை தயாராக உள்ளது என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொலிஸ்மா அதிபர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ''குறிப்பாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கும்பல்களின் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
சர்வதேச அமைதி
இந்த நிலைமை சர்வதேச அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. வன்முறையான மோதல்களின் எழுச்சி மோதல் வலயங்களில் பொதுமக்களின் அவலநிலை, சைபர் கிரைம், ஆயுதமயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் போன்ற பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களின் தோற்றம் உட்பட சர்வதேச ரீதியாக பாதுகாப்பு சவால்களின் அதிகரித்து வருகின்றமையானது சிக்கலான தன்மைகளை அனைத்து நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பாதுகாப்புக்காக இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்ந்தும் இருக்கும் என்பதோடு தற்போது தயார் நிலையில் இலங்கை பொலிஸ் பிரிவு உள்ளது.
அத்துடன் இலங்கை பொலிஸ் பிரிவு தரம் மூன்றிலும் காணப்படுகின்றமை நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கும்பல் வன்முறைகளின் அதிகரித்துவரும் அச்சுறுத்தலை சமாளிக்க விசேட பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிப்பதோடு நிலைநிறுத்துவது பற்றி ஐக்கிய நாடுகள் பரிசீலனை செய்ய வேண்டும்.
அத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அனுபவம் வாய்ந்த பொலிஸ் அதிகாரிகள் குற்றவியல் நீதித்துறை வல்லுநர்களுக்கு பங்களிக்க எமது நாடு தயாராக இருக்கிறது.
இதேபோன்று பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் பங்காளி நாடுகளுடன் தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள இலங்கை தயாராக உள்ளது" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
