பொன்னி சம்பா அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
3,500 மெட்ரிக் தொன் 'பொன்னி சம்பா' அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உள்ளூர் சந்தையில் தற்போது நிலவும் 'கீரி சம்பா' அரிசிக்கான பற்றாக்குறைக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஒக்டோபர் (15) ஆம் திகதி அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்தது.
அரிசி இறக்குமதி
அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதல் தொகுதி ஒக்டோபர் 23 அன்று நாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இதனையடுத்து 'பொன்னி சம்பா' அரிசியின் மேலும் தொகுதிகள் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒவ்வொரு இறக்குமதியாளரும் அதிகபட்சமாக 520 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri