பொங்கு தமிழ் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு
பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(17.01.2024) மதியம் 12 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் நடைபெற்றுள்ளது.
துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு : கோட்டாபயவின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
சுயநிர்ணய உரிமை
கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற பொங்குதமிழில் தமிழ் மக்களின் அபிலாசைகளான, சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரகடனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவு தினத்தில் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மா.இளம்பிறையன், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |