மன்னார் தமிழ்ச் சங்க ஏற்பாட்டில் பொங்கல் விழா
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது.
வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் வாழ்வோதய மண்டபத்தில் இன்று (21.1.2024) காலை ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக மன்னார் உதவி தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா கலந்து கொண்டிருந்தார்.
நினைவுச் சின்னம்
அத்துடன் முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு, ஓய்வு நிலை மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்டியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நடனம், கிராமிய
நடனம், கவிதை, கிராமியப்பாடல் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு மன்னார் தமிழ்ச் சங்கத்தால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
